டெங்கு, சிக்குன் குனியா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுரை

டெங்கு, சிக்குன் குனியா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு  பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுரை

டெங்கு, சிக்குன் குனியா அறிகுறிகள் குறித்து மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பி யுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வகுப்பறை மற்றும் கழிவறை யைச் சுற்றி தண்ணீர் தேங்கியிருந் தால் உடனடியாக அதை தலைமை ஆசிரியருக்கு மாணவர்கள் தெரிவிக்க வேண்டும். தேங்கிய நீரை அகற்றுவதற்கு தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பானை, மற்றும் தண் ணீர் தொட்டிகளை மூடிவைக்க வேண்டும். இதன் மூலம் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்கலாம். பள்ளி வளாகம் மற்றும் வீடுகளில் கொசுக்கள் முட்டையிட ஏதுவாக உள்ள தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்ணீர் தொட்டிகள், வடி கால்கள், கட்டுமானப்பணிகள் நடக்கும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து அங்கு தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சி வடிகட்டிய குடிநீரை அருந்துமாறும் பாதுகாப்பான உணவுகளை சாப்பிடுமாறும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும். மாணவர்களிடம் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அதை ஆசிரியர்கள் கண்டறிந்து அம் மாணவர்களை அருகேயுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்து உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு, சிக்குன் குனியா அறிகுறிகள் குறித்து மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Comments