அசத்த வரும் ஸ்மார்ட்போன்!

அசத்த வரும் ஸ்மார்ட்போன்!

பின்லாந்தை சேர்ந்த 'டியூரிக் ரோபாட்டிக்ஸ் இண்டஸ்ட்ரிஸ்' நிறுவனம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது.

'டியூரிங் போன் கடென்ஸா' எனப்படும் அந்த போனில் 12 ஜி.பி. திறன் கொண்ட 'ராம்' நினைவகம் இருக்கும். பேட்டரி பிரச்சினை பற்றி கவலைப்படாமல் இருப்பதற்காக 3 பேட்டரிகள் இணைக்கப்பட்டிருக்கும், அதிவேக சக்தியை கொடுப்பதற்காக 2 பிராசஸர்களில் செயல்படுகிறது. 60 எம்.பி. கேமரா உடையது. 5.8 அங்குல திரை கொண்டிருக்கும். 500 ஜி.பி. மெமரி கார்டை பயன்படுத்தலாம். 1600 மில்லி ஆம்பியர் பேட்டரி இருக்குமாம்.

மொத்தத்தில் ஒரு டெராபைட் அளவுடைய தகவல்களையும் எளிதாக சேமித்து செயல்படும் திறன் கொண்டது இதன் பிராசஸர்கள்.

2017-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் இந்த ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. கூகுள் மற்றும் ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்களும் விரைவில் செயற்கை அறிவு நுட்பத்துடன்கூடிய அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ரகசியமாக துரித செயல்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவைகளும் அடுத்த ஆண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம். ஆக, ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு 2017-ம் ஆண்டு கொண்டாட்டம் தரக்கூடியதுதான்.

Comments