உலக பொருளாதார அரங்கில் வேகமாக முன்னேறும் இந்தியா!!!

உலக பொருளாதார அரங்கில் வேகமாக முன்னேறும் இந்தியா!!!

பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது.பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் தெற்காசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் கடைசி இடத்திலும் உள்ளன.உலக பொருளாதார தரவரிசை பட்டியலில் இந்தியா 39வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 55 வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 16 இடங்கள் முன்வேறி 39வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 71வது இடத்திலும், பூடான் 97 வது இடத்திலும், நேபாளம் 98 வது இடத்திலும், வங்கதேசம் 106வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 122வது இடத்தில் உள்ளது.நிறுவனங்கள், உள்கட்டமைப்பு, பொருளாதார சூழல், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட 12 துறைகளின் அடிப்படையில் இந்த உலக பொருளாதார தரவரிசை பட்டியல் 2005 ம் தேதி முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் தொடர்ந்து 8 வது ஆண்டாக சுவிட்சர்லாந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது

No comments:

Post a Comment