‘பிலே’ கலம் கண்டுபிடிப்பு

'பிலே' கலம் கண்டுபிடிப்பு

வால் நட்சத்திரத்தின் மீது முதல் முறையாக இறக்கப்பட்ட 'பிலே' ரோபோ கலம், அது தொடர்பை இழந்த ஓராண்டு காலத்துக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

67பி என்ற விண்கலத்தை ரோசெட்டா விண்கலம் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, இந்த விண்கலத்தில் இருந்து பதி விறக்கம் செய்யப்பட்ட புதிய படங்களில், இச்சிறிய ரோபோ கலம் இருப்பது நன்கு புலப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டில் வால் நட்சத்திரத்தின் தளத்தின் மீது பிலே தரையிறக்கப்பட்டது. ஆனால், தரையிறக்கப்பட்ட 60 மணி நேரத்துக்குப் பிறகு, அதனுடைய பேட்டரி செயல் இழந்துவிட்டதால், பிலே ரோபோ கலத்தின் இயக்கம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பிலே கலம்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும், பகல் நேரம் போல அது தெளிவாக இருந்தது என்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment