காவல்துறை விசாரணைக்காக ‘மொபைல் பாஸ்போர்ட் போலீஸ் ஆப்’ அறிமுகம்

காவல்துறை விசாரணைக்காக 'மொபைல் பாஸ்போர்ட் போலீஸ் ஆப்' அறிமுகம்

மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் விவரங்களை காவல்துறை யினர் விசாரித்து அந்த தகவல்களை ஆன்-லைன் மூலம் விரைவாக அனுப்புவதற்காக 'மொபைல் பாஸ்போர்ட் போலீஸ் ஆப்' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இதனால் மேலும் விரைவாக பாஸ்போர்ட் வழங்க முடியும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கூறினார். இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பால முருகன் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முன்பு பாஸ்போர்ட் பெறுவது கடினமான காரியமாக இருந்தது. குறிப்பாக, கிராமப் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். பின் னர் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் தற்போது பாஸ்போர்ட் பெறுவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 280 இ-சேவை மையங்களில் ஆன்-லைன் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இடைத்தரகர்களின் தொல்லை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது நேர்காண லுக்கு முன்பு 19 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இது தற்போது 2 நாட்களாக குறைந் துள்ளது. மேலும், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு மற்றும் 'அனெக்சர்-ஐ' என்ற பிரமாணப் பத்திரம் ஆகிய 4 ஆவணங்களை பயன்படுத்தி 4 நாட்களுக்குள் பாஸ்போர்ட் பெறும் வசதியை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலமும் விரைவாக பாஸ்போர்ட் பெறலாம். இந்நிலையில், மேலும் ஒரு புதிய முயற்சியாக பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து ஆன்லைன் மூலம் விரைவாக தகவல்களை அனுப்புவதற்காக 'மொபைல் பாஸ்போர்ட் போலீஸ் ஆப்' என்ற புதிய செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது, சென்னை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள 230 காவல் நிலையங்களில் இன்னும் ஒரு மாதத்துக்குள் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக, ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு 'டேப்லெட்' (TABLET) கருவி வழங்கப்படும். பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களை போலீஸார் நேரில் சென்று விசாரித்து, அந்தத் தகவல்களை டேப்லெட்டை பயன் படுத்தி ஆன்-லைனில் விரைவாக அனுப்ப முடியும். இதனால் நேரம் மிச்சமாகும். கடந்த ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த மாதம் வரை 3 லட்சத்து 3 ஆயிரம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கையால் எழுதப்பட்ட பாஸ் போர்ட்டுகளை அச்சடிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளாக மாற்ற சர்வதேச விமான போக்குவரத்து ஆணையம் விதித்த கெடு கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதியோடு முடிந்துவிட்டது. எனவே, அத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உடனடியாக அவற்றை மாற்றிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இல்லையென்றால் அவர்களால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது. இவ்வாறு கே.பாலமுருகன் கூறினார்.  

 

Comments