உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி

* ஜோர்டான் நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாகிட் ஹாட்டர் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவு படுத்தும் வகையில் கார்ட்டூன் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆஜர் ஆவதற்காக அவர் தலைநகர் அம்மானில் உள்ள கோர்ட்டு நுழைவாயிலில் காத்துக்கொண்டிருந்த போது, ரயித் அப்துல்லா என்பவர் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

* கொலம்பியாவில் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் சமாதான உடன்படிக்கை ஒப்பந்தத்தில் அதிபர் ஜூவான் மானுவல் சாண்டோஸ் மற்றும் கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் தலைவர் டிமோசென்கோ ஆகியோர் கையெழுத்திட உள்ளனர். இதன் மூலம் அங்கு 52 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மெக்சிகோவின் மிச்சோகன் மாகாணத்தை சேர்ந்த ஒரு பாதிரியாரை ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் கடந்த வாரம் கடத்தி சென்றனர். தற்போது அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். வெராகுருஸ் மாகாணத்தை சேர்ந்த 2 பாதிரியார்கள் சமீபத்தில் கடத்தி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

* ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மேற்கு பகுதியில் உள்ள இஷ்கான் என்ற இடத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்று உள்ளது.

No comments:

Post a Comment