விதைப்பான்!

விதைப்பான்!

மரங்கள் வெட்டப்பட்ட காடுகளில், மீண்டும் விதைகளை விதைக்க, மனிதர்கள் மண் வெட்டியும், கடப்பாரையுமாக சென்றால், வேலை முடிய மாதக் கணக்கில் ஆகும். ஆனால், அமெரிக்காவிலுள்ள, 'ட்ரோன்சீட்' நிறுவனத்தின் விதை விதைக்கும் ட்ரோன், ஒன்றரை மணி நேரத்தில், 1 ஏக்கரில் காட்டில் விதைத்து முடித்து விடுகிறது.ஒரு சிறிய ஹைட்ரோஜெல் பையில், விதை, உரம், பூச்சி மருந்து போன்றவற்றை வைத்து பொட்டலங்களாக ஆக்கி விடுகிறது ட்ரோன்சீட். இதை எடுத்துக் கொண்டு போகும் ட்ரோன், தரைக்கு சற்று உயரே மிதந்தபடி, துப்பாக்கி சுடுவது போல நிமிடத்திற்கு, 350 அடி வேகத்தில் தரையை நோக்கி செலுத்துகிறது. விதை, 2 அங்குல ஆழத்தில் நிலத்தில் விதைக்கப்படுகிறது. சில ஆண்டுகள் காத்திருந்தால், அங்கே  மரக்காடு மலர்ந்திருக்கும்.

Comments