பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர்கள் மாற்றம்

பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர்கள் மாற்றம்

பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 6 முறை அமைச்சர்கள் மாறினர். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் இணை இயக்குநர்கள் பணியிடங்கள் மாற்றப்பட்டே வந்தன. தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிடுகிறது.இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் நேற்று 3 இணை இயக்குநர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வந்த சேதுராமவர்மா, பள்ளிக் கல்வியில் பணியாளர் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் லதா அங்கிருந்து மாற்றப்பட்டு இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.வயது வந்தோர் மற்றும் முறைசாராக் கல்வித்துறையின் இணை இயக்குநர் சுகன்யா அங்கிருந்து மாற்றப்பட்டு தொடக்க கல்வித்துறையின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்குமார் ஆகிய இருவரும் இணை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment