மாநில பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ-க்கு இணையாக மாற்ற வேண்டும் அமைச்சரிடம் தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மாநில பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ-க்கு இணையாக மாற்ற வேண்டும்  அமைச்சரிடம் தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தமிழக மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற வசதியாக மாநில பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி அமைச்சரிடம் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர்கள் சங்க மாநில தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, பொதுச் செயலாளர் பி.நடராஜன், பொரு ளாளர் பி.ரவிச்சந்திரன், அமைப் புச் செயலாளர் ஆ.பீட்டர்ராஜா உள்ளிட்டோர் தலைமைச் செயல கத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜனை நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித் தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:

6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள பாடத்திட்டத்தை இன்றைய காலச் சூழலுக்கு ஏற்பவும், அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற வசதியாகவும் மாநில பாடத் திட்டத்தை சிபிஎஸ்இ பாடத்திட் டத்துக்கு இணையாக மாற்ற வேண்டும்.

பள்ளிகளை விரைவாக கண் காணிக்கும் வகையில் தாலுகா அளவில் மாவட்ட கல்வி அலுவலர் நிலையில் பணியிடங்களை ஏற் படுத்த வேண்டும். பள்ளி மாணவர் களுக்கான 14 விதமான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு ஒவ்வொரு 10 பள்ளிகளுக்கும் ஒரு தொடர்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.

கடந்த 2 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள சுமார் 4,250 ஆய்வக உதவியாளர் பணியிடங் களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை யில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மாதம் ரூ.3 ஆயிரம் ஊதியத்தில் நியமிக்கப்பட்ட துப்புரவு பணி யாளர்களின் ஊதியத்தை திருத்தியமைக்க வேண்டும்.

அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் இன்டர்நெட், வைஃபை வசதிகளை ஏற்படுத்துவதோடு தேவையான கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 100 சதவீத தேர்ச்சி அளிக்கும் தலைமை ஆசிரியர் களுக்கு வழங்கப்பட்டு வந்த பாராட்டுச்சான்று கடந்த 4 ஆண்டு களாக வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து வழங்க வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத் தும்போது அனைத்துப்பிரிவு ஆசிரி யர்களுக்கும் சரியான ஊதிய விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும்.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களே பள் ளிக்கும், மாணவர்களுக்கும் உடனடி தேவையுள்ள பொருட்கள், ஆய்வக உபகரணங்கள் மற்றும் புத்தகங்களை வாங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Comments