எம்.எல்., 'ரிசல்ட்:' இன்று வெளியீடு !

எம்.எல்., 'ரிசல்ட்:' இன்று வெளியீடு !

சென்னை பல்கலையின், எம்.எல்., சட்ட மேற்படிப்புக்கான தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. இது குறித்து, சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, திருமகன் வெளியிட்ட அறிவிப்பு: எம்.எல்., முதுநிலை சட்டப் படிப்புக்கு, ஜூனில் நடந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும்; பல்கலைஇணையதளத்தில், முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அடுத்ததாக, டிசம்பரில் நடைபெற உள்ள எம்.எல்., தேர்வு எழுத விரும்புவோர், அக்., 17 வரை விண்ணப்பிக்கலாம்; தவறுவோர், அக்., 25 வரை அபராத தொகையுடன் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விபரங்களை, www.unom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments