SCROL

Friday, September 30, 2016

உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி

* அங்கோலா நாட்டில் அமெரிக்க எண்ணெய் நிறுவனம் அமர்த்தியிருந்த ஹெலிகாப்டர் ஒன்று, மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் பலியாகினர்.

* துருக்கி நாட்டில் கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தபோது, அதற்கு துணை போனதாக 32 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை அந்த நாட்டின் நீதித்துறை மந்திரி பெக்கிர் போஸ்டாக் அறிவித்துள்ளார்.

* ஐரோப்பாவில் ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஐ.எஸ். அமைப்பின் பிரிவினை ஏற்படுத்த முயன்ற சந்தேகத்தின்பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* இந்தோனேசியாவில் லோம்பாக் தீவில் பருஜாரி எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு, சாம்பலை கக்கி வருகிறது. இதனால் அங்கு நேற்று நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

No comments:

Post a Comment