டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் ஏஞ்சலிக் கெர்பர் முதலிடம்

டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் ஏஞ்சலிக் கெர்பர் முதலிடம்

அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், மகளிர் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த 2-வது ஜெர்மனியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கெர்பர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச டென்னிஸில் ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். அதன்பிறகு இப்போது கெர்பர் 8,730 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.186 வாரங்களாக தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் 7,050 புள்ளிகளுடன் உள்ளார். ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா, போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, ருமேனியாவின் சிமோனா ஹாலப் ஆகியோர் முறையே 3, 4, 5-வது இடங்களில் உள்ளனர். அமெரிக்க ஓபன் அரை இறுதியில் செரீனாவை வீழ்த்திய செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 11-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

 

Comments