SCROL

Sunday, September 25, 2016

'அமேசான்' அதிபரின் புத்தம் புதிய ராக்கெட்!

'அமேசான்' அதிபரின் புத்தம் புதிய ராக்கெட்!

அமேசான் இணைய தளத்தின் அதிபர் ஜெப் பெசோசுக்கு சொந்தமான, 'புளூ ஆரிஜின்' என்ற விண்வெளி போக்குவரத்து நிறுவனம், தன் புதிய ராக்கெட்டுகளை, சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. விண்வெளியில் பூமியை வலம் வந்த, முதல் அமெரிக்கரான ஜான் கிளென் என்பவரை கவுரவிக்கும் விதமாக, இந்த ராக்கெட்டுக்கு, 'நியூ கிளென்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. நியூ கிளென், மறு பயன் ராக்கெட் வகையை சேர்ந்தது. எனவே, அமெரிக்காவின் தனியார் விண்வெளி துறையில் முன்னோடியான, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்துக்கு நியூ கிளென் போட்டியாக இருக்கும். ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ், இரண்டு முறைக்கு மேல் மறுபயன் ராக்கெட்டுகளை ஏவி வெற்றி கண்டு உள்ளது. நியூ கிளென்னும், பூமியிலிருந்து கிளம்பி, செயற்கைக் கோள்கள், விண்வெளி வீரர்களை விண்வெளியில் விட்டுவிட்டு, பத்திரமாக பூமிக்கு திரும்பும். திரும்பியதும் அதை மீண்டும் பயன்படுத்தலாம். இதனால் ராக்கெட் ஏவும் செலவு பாதிக்குப் பாதி குறையும். இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் மீத்தேனை எரிபொருளாகக் கொண்ட ஏழு இயந்திரங்கள் இருக்கும். நியூ கிளென் ராக்கெட்டை, புளூ ஆரிஜின் சொந்த ஏவுதல்களுக்கு பயன்படுத்துவதோடு, லாக்ஹீட் மார்ட்டின், போயிங் போன்ற பிற ராக்கெட் ஏவு தொழில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் விற்கவும் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில், விண்வெளித்துறை தனியாரின் கையில்!

No comments:

Post a Comment