KALVISOLAI TNPSC

Tuesday, 27 September 2016

உலகிலேயே மிக உயரத்திலுள்ள ஏரி

உலகிலேயே மிக உயரத்திலுள்ள ஏரி

உலகத்திலேயே மிக உயரமான ஏரி தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆண்டெஸ் மலையில் உள்ள "டிட்டிகாகா" ஏரிதான் அது. கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த ஏரி.இந்த ஏரி 2 நாடுகளுக்கு சொந்தமானது. பெரு நாட்டில் ஏரியின் பெரும்பகுதி அமைந்துள்ளது. பொலிவியா நாட்டில் ஏரியின் சிறிய பகுதி அமைந்துள்ளது. இந்த ஏரி அதிக நீளம் கொண்டது. 220.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஏரியின் அகலம் 110.4 கி.மீ. ஆகும். இதில் ஏகப்பட்ட ஆறுகள் வந்து கலக்கின்றன. டிஸ்கவுடெரா என்ற ஒரேயொரு நதி மட்டும் இந்த ஏரியிலிருந்து புறப்படுகிறது. இந்த ஏரியில் சன், மூன் என்ற பெயரில் தீவுகளும் உள்ளன.பூமத்திய ரேகைக்கு மிக சமீபமாக இந்த ஏரி அமைந்திருந்தாலும் கோடைகாலத்தில் அமெரிக்காவில் உள்ள மற்ற எல்லா ஏரிகளை விட குளிர்ந்தே இருக்கிறது. அதற்கு காரணம் இது கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைந்திருப்பதுதான். இவ்வளவு உயரத்தில் இந்த ஏரி இருந்தபோதும் இதன் சுற்றுப்புறத்தில் பசுமை காணப்படுவதில்லை. ஏரியை சுற்றிலும் வறண்டு காணப்படுகிறது.ஏரியின் அருகே மரங்கள் கூட வளர்வதில்லை. இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. இதுமட்டுமல்லாமல் கரையோரங்களில் மர்மமான அழிவுச்சின்னங்கள் சில காணப்படுகின்றன. இதனைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

No comments:

Post a comment