SCROL

Friday, September 30, 2016

சீனாவில் திகில் ஏற்படுத்தும் நீளமான கண்ணாடி பாலம் இன்று மீண்டும் திறப்பு

சீனாவில் திகில் ஏற்படுத்தும் நீளமான கண்ணாடி பாலம் இன்று மீண்டும் திறப்பு

உலகிலேயே மிக நீளமான, உயரமான கண்ணாடி நடைபாதை பாலம் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜீ மலைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 20-ல் திறக்கப்பட்டது. இரு மலை உச்சிகளுக்கு இடையே கட்டப்பட்ட இந்த பாலத்தின் தரைப்பகுதி முழுவதும் கண்ணாடியால் வடி வமைக்கப்பட்டுள்ளது.தரைமட்டத்தில் இருந்து 300 மீட்டர் உயரத்திலும், இரு மலைக்கு இடையே 430 மீட்டர் நீளத்திலும் இந்த பாலம் கட்டப் பட்டிருப்பதால், அதில் நடந்து செல்லும்போது பார்வையாளர் களுக்கு திகிலான அனுபவத்தை தரும். நடைபாதையில் கண்ணாடி பதிக்கப்பட்டிருப்பதால் எங்கே உடைந்து விடுமோ என்ற அச்சத் தையும் ஏற்படுத்தும். அதே சமயம் பள்ளத்தாக்கில் நிரம்பி இருக்கும் இயற்கை காட்சிகளையும் வெகு வாக ரசிக்க முடியும். வடிவமைப்பு, கட்டமைப்பு என 10 உலகச் சாதனைகளை படைத்த இந்த நடைபாதை பாலம் திறக்கப்பட்ட சில நாட்களுக் குள்ளாகவே மூடப்பட்டது. நாளொன்றுக்கு 8 ஆயிரம் பேர் பாலத்தை பார்வையிட வருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்டுங்கடங்காத கூட்டம் முண்டியடித்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக பாலம் மூடப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது. இந்நிலையில் பாலத்தில் மேற் கொள்ளப்பட்ட சிறிய அளவிலான பராமரிப்பு பணிகள் முடிவடைந்திருப்பதால் நாளை முதல் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிந்தபடி பாலத்தில் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment