SCROL

Thursday, September 29, 2016

உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி

* துருக்கி நாட்டில் அடானா நகரில் உள்ள அமெரிக்கர்களின் ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தும் வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன என அமெரிக்க துணை தூதரகம் தெரிவித்துள்ளது. அந்த ஓட்டல்களுக்கு செல்கிற அமெரிக்க குடிமக்கள் உஷாராக இருக்கும்படி அது கேட்டுக்கொண்டுள்ளது.

* சீனாவுக்கு தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டின்பேரில், புளோரிடா மாகாணத்தை சேர்ந்த அமின் யு என்ற பெண்ணுக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

* ஜெர்மனியில் டிரெஸ்டன் நகரில் உள்ள மசூதியிலும், பன்னாட்டு மாநாட்டு அரங்கிலும் நேற்று குண்டுகள் வெடித்தன. ஆனால் இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

* சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர முயற்சித்ததுடன், வங்கி மோசடி குற்றத்தில் ஈடுபட்டதாக கலிபோர்னியாவை சேர்ந்த ஒருவருக்கு அமெரிக்க கோர்ட்டில் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

* அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், பர்லிங்டன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை கொன்றதாக ஆர்கன் செட்டின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என அமெரிக்க சட்ட அமலாக்கல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment