நீட் தேர்வு: சிபிஎஸ்இ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நீட் தேர்வு: சிபிஎஸ்இ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிரான வழக்கில் சிபிஎஸ்இ, மத்திய அரசு, தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்த மாணவர் சுரேஷ் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், மருத்துவ நுழைவுத்தேர்வு குறித்த பிரதான வழக்குடன் சுரேஷின் மனு சேர்த்து விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. சுரேஷ் தாக்கல் செய்த மனுவில், பொது நுழைவுத்தேர்வு வரும்போது மற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் குறைந்த அளவில்தான் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments