SCROL

Thursday, September 29, 2016

பூமியின் சுழலும் வேகம் குறைகிறது

பூமியின் சுழலும் வேகம் குறைகிறது

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. பூமி இப்படி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதால்தான் பூமியில் இரவு பகல் தோன்றுகிறது. பூமி தன்னைத்தானே கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகிறது என்றால் நிலவு மேற்கிலிருந்து கிழக்காக பூமியை சுற்றி வருகிறது. அதனால்தான் நிலவு ஒவ்வொரு நாளும் சுமார் 50 நிமிடம் தாமதமாக உதிக்கிறது.

பூமியின் சுழற்சிக்கு எதிராக நிலவு சுற்றுவதால் பூமியின் வேகத்திற்கு அது ஒரு 'பிரேக்' போல் செயல்படுகிறது. அதற்கு நிலவின் ஈர்ப்பு விசையே காரணம். இப்படி ஈர்ப்பு விசையும், பூமியின் சுழற்சிக்கு எதிராக செயல்புரியும் ஆற்றலும் ஒன்று சேர்ந்துதான் கடலில் அவ்வப்போது கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன.

நிலவு இயக்கத் தடையாக செயல்படுவதால் பூமியின் சுழலும் வேகமும் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. 100 ஆண்டுகளுக்கு 0.002 வினாடி குறைகிறது. அதாவது 62,500 வருடத்திற்கு ஒரு வினாடி குறைகிறது. அளவிட முடியாத அளவிற்கு இது மிக குறைவானது ஆகும். ஆகவே, நமது வாழ்நாளில் ஏன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இதன் தாக்கம் எதுவும் புலப்படாது. ஆனால் 100 கோடி வருடங்களுக்கு முன்பு பூமியில் ஒரு நாள் என்பது 20 மணி நேரமாக இருந்தது. அவ்வளவு வேக, வேகமாக பூமி சுழன்றது.

பூமியில் உயிரினங்கள் தோன்றிய காலத்தில் அதாவது 300 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் ஒரு நாள் 12 மணி நேரமாக இருந்தது. ஒரு பகல் 6 மணி நேரமாகவும், இரவு 6 மணி நேரமாகவும் இருந்தது. அதற்கும் முந்தைய காலத்தில் அதாவது சூரியனில் இருந்து பூமி பிரிந்த காலத்தில் பூமியின் ஒருநாள் 6 மணி 30 நிமிடங்களாக இருந்தது. இப்படி படு வேகத்தில் சுற்றிய பூமி கொஞ்சம் கொஞ்சமாக அதன் வேகம் குறைந்து இன்றைக்கு ஒரு சுற்று சுற்ற 23 மணி 56 நிமிடம் 4 வினாடி எடுத்துக்கொள்கிறது.

மறுபுறம் பூமியின் அருகாமையில் இருந்த நிலவு மெல்ல மெல்ல பூமியை விட்டு விலகிச்செல்கிறது. ஆண்டுக்கு 3 செ.மீ. என்ற வீதத்தில் நிலவு நம்மை விட்டு விலகிச் சென்று கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment