இந்த வருடம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் இந்திய வானிலை மையம் அறிவிப்பு

இந்த வருடம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் இந்திய வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இந்த வருடம் வட கிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பருவமழை

தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை சற்று அதிகமாகவே பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை பெய்தது. அதன் காரணமாக சென்னையில் வெள்ள சேதம் ஏற்பட்டது.இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்று இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அதன் இணையதளத்தில் அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

48 சதவீதம்

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, கடலோர ஆந்திர பிரதேசம், கேரளா, தெற்கு உள் கர்நாடகா ஆகியவை வருடம் தோறும் பெறக்கூடிய மழையில் 30 சதவீதத்தை பெறுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் 48 சதவீத மழை கிடைக்கிறது. கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை காலத்தில் 152 சதவீதம் மழை பெய்தது. அதாவது இயல்பை விட அதிகமாக பெய்தது.

தமிழ்நாட்டில் இயல்பான அளவு பெய்யும்

இந்த வருடம் (2016) வட கிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பெய்யும். அதாவது இயல்பான மழை பெய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments