Friday, September 30, 2016

துஷ்ட சக்திகளை வேரறுக்கும் காவல் தலைவன் வீரக்காரன்

துஷ்ட சக்திகளை வேரறுக்கும் காவல் தலைவன் வீரக்காரன்

சேலம் களரம்பட்டியில் ஆவணி மாதத்தில் வீரக்காரன் கோயில் திருவிழா களை கட்டும். எட்டுப்பேட்டை கட்டியாளும் கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து சக்தி அழைப்புடன் விழா துவங்குகிறது. அடித்தட்டு மக்கள் ஆராதிக்கும் தெய்வமாக வீரக்காரன் இருந்தாலும் சாதி, மதங்களை கடந்து அனைவரும் அலைகடலாய் திரண்டு வீரக்காரனை வழிபடுவர். சாதி, மதபேதம் கடந்து திரளும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கிடா விருந்து வைப்பது விழாவின் முக்கிய அம்சம். கறிக்குழம்பு வாசமும், கனிவான உபசரிப்பும் மனங்களை ஈர்க்கும்.

காதுகுத்து, நேர்த்திக்கடன், தீச்சட்டி, கரகாட்டம், ஒயிலாட்டம் என்று திரும்பிய திசையெல்லாம் தமிழ் மண்ணின் வாசம் வீசும். இதற்கு காரணமும் இருக்கிறது. தமிழ்க்கடவுள் முருகன், சூரனை வென்ற ேபார்களத்தில் காவல் தலைவனாக இருந்தவர் தான் வீரக்காரன் என்கின்றனர் முன்னோர்கள்.

சூரனை வதம் செய்ய முருகனுக்கு துணை நின்ற வீரபாகுவின் மற்ெறாரு அம்சம் தான், வீரபத்திரன் என்னும் வீரக்காரன். சிவனின் வேர்வையில் இருந்து உருவானவர் வீரக்காரன். இவர் முருகனுக்கு தம்பியானவர். பெரும்பாலான சிவன் கோயில்களில் வீரபத்திரன்  என்னும் வீரக்காரன் தான் காவல் ெதய்வமாக இருப்பார். சூரனை அழிக்க முருகனுக்கு துணையாக சிவன், வீரபாகுவை அனுப்பி வைத்தார்.

போர் நடந்த இடத்தில் காவல் தலைவனாக இருந்தவர் தான் வீரக்காரன். கம்பீரமான உடல் கட்டமைப்பு, கையில் வேல்கம்பு சகிதமாக அவரை பார்க்கும் மனங்களில் உறுதி தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும். மூலவர் வீரக்காரனுக்கு இடது புறத்தில் புடவைக்காரியும், வலது புறத்தில் கன்னிமார்களும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.பில்லி, சூனியம், துஷ்ட சக்திகள் என்று அனைத்தையும் வேரறுத்து, மக்களை காக்கும் சக்தி வாய்ந்த ெதய்வம் வீரக்காரன்.

மனதில் நினைத்தாலே உடலுக்கு பலம் தருவது தான் வீரக்காரனின் சிறப்பு. இதில் ஆண், பெண், இளைஞர், முதியவர், எளியவர், வலியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று எந்த பாகுபாடும் இல்லை. கோயிலுக்கு வந்து மண்டியிட்டு வழிபட வேண்டும் என்பதும் இல்லை. எந்த திசையில் இருந்து வழிபட்டாலும், நமக்கு துணை நின்று காப்பவர் தான் வீரக்காரன் என்பது ஆண்டாண்டு காலமாய் அவரை வழிபடும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆடிப்பெருக்கு நாளில் சுத்தமாகும் ஆயுதங்கள்

வீரக்காரன் கோயிலில் நடக்கும் பொங்கல் வைபவமும், முப்பூஜையும் மிகவும் பிரசித்தி பெற்றது. முப்பூஜையில் முதலில் பன்றியும், அதன்பின் ஆடு, கோழிகளும் பலி கொடுக்கப் படும். பன்றி பலியிடுவதற்காக பிரத்யேகமாக ஒரு வேல்கம்பு, வீச்சரிவாள் பயன்படுத்தப் படுகிறது. இந்த வேல்கம்பு, வீச்சரிவாளில் படிந்துள்ள ரத்தகறையை, ஒவ்ெவாரு ஆண்டும் ஆடிப் ெபருக்கில் காவிரியாற்று நீரில் சுத்தப்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஆடிமாதம் என்பது யுத்தகாலம். வீரக்காரன் போர்வீரன் என்பதால் அவரது ஆயுதங்களை ஆடிப்பெருக்கில் காவிரியில் சுத்தப்படுத்துகிறோம் என்கின்றனர் ேகாயில் நிர்வாகிகள்.

No comments:

Post a Comment