டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு

டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு

காய்ச்சல் என்பது உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் வருகிறது. காய்ச்சலால் உடல் வற்றிப்போகும். உடல் வலி ஏற்படும். காய்ச்சல் என்பது இன்னொரு நோய்க்கு  அடையாளம். கிருமிகளின் தாக்கத்தால் உடலில் ஏற்படும் பாதிப்பை எடுத்து காட்டுவதாக காய்ச்சல் இருக்கிறது. இனிவரும் காலம் மழை, பனி காலம் என்பதால்சிக்கன் குன்யா, டெங்கு, மலேரியா உள்ளிட்ட பலவகை  காய்ச்சல் வரவாய்ப்புள்ளது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காய்ச்சலை குணப்படுத்த கூடிய  மருத்துவம் குறித்து பார்க்கலாம். நிலவேம்பை பயன்படுத்தி டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் நிலவேம்பு குடிநீர் சூரணம் எடுத்து ஒரு டம்ளர் நீரில் நன்றாக கொதிக்க வைக்கவும். வடிகட்டி சிறிது தேன் சேர்த்து காலை, மாலை என இருவேளை  குடித்துவர காய்ச்சல் குணமாகும். மூட்டு வலி சரியாகும். சாதாரணது முதல் டெங்கு உள்ளிட்ட அச்சுறுத்த கூடிய எந்தவகை காய்ச்சலாக இருந்தாலும்  மூலிகைகள் நமக்கு பயன் தருகிறது. குறிப்பாக நிலவேம்பு சிறந்த மருந்தாகிறது. இது மிகுந்த கசப்பு சுவை உடையது. விஷத்தை முறிக்க கூடியது.  நுண்கிருமிகளை போக்கும் தன்மை கொண்டது. வியர்வையை தூண்டக் கூடியது. சதாராண காய்ச்சல், மலேரியா, காசநோயால் வரும் காய்ச்சல், யானைகால் நோயால் ஏற்படும் காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்த நிலவேம்பு குடிநீர்  பயன்படுகிறது. காய்ச்சலின் போது ஏற்படும் மூட்டு வலி, உடல் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.4 பவளமல்லி இலைகள், 4 சீந்தில் இலைகள் ஆகியவற்றை துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி உணவுக்கு  முன்பு ஒருவேளை குடித்துவர விஷ காய்ச்சல் குணமாகும். மூட்டு, முதுகு, கழுத்து வலி சரியாகும். சீந்தில் சாலை ஓரங்களில் வளர்ந்து மரம் முழுவதும் படர்ந்து காணப்படும் மூலிகை. இதை அடிக்கடி பயன்படுத்தி வருவதால் ஆயுள் அதிகரிக்கும். இது பல்வேறு  சத்துக்களை உள்ளடக்கியது. காய்ச்சலை போக்கும். வலியை குறைக்கும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. டெங்கு காய்ச்சலின்போது, ரத்த வட்ட அணுக்கள்  குறைபாடுகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். பப்பாளி இலையை அரைத்து சாறு எடுக்கவும். இந்த சாறு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர ரத்த வட்ட  அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.டெங்கு காய்ச்சல் உடலை முடக்க செய்ய கூடியதாக உள்ளது. மூட்டு வலி, வீக்கம் தரக்கூடியது. இதனால் ரத்த சோகை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும்.  ரத்த வட்ட அணுக்களை அதிகரிப்பதில் பப்பாளி இலை அற்புதமான மருந்தாகிறது. இது காய்ச்சலை தணிக்கிறது. வலியை குறைக்கிறது. நோயை எதிர்த்து  நிற்கும் சக்தியை கொடுக்கிறது. பப்பாளி மரம் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது நல்லது. பசியின்மை, உணவில் விருப்பமின்மையை போக்கும் மருத்துவம் குறித்து  பார்க்கலாம். பசியின்மைக்கு கத்தரிக்காய் அற்புதமான உணவாகிறது. இதில் கந்தக சத்து அதிகம் உள்ளது. இது, அதிக உஷ்ணம் தரக்கூடியதால், உள் உறுப்புகளை  தூண்டும் தன்மை கொண்டது. கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் பசியை தூண்டும்.

Comments