மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ரயில்வேயில் புதிய திட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ரயில்வேயில் புதிய திட்டம்

நாட்டின் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு இயக்கப்படும் பேட்டரி கார்கள் திட்டமான 'யாத்ரி மித்ர' திட்டத்தை, ரயில்வே அமைச்சகம் விரைவில் துவக்க உள்ளது.ரயில்களில் பயணம் செய்ய விரும்பும் முதியோர், நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ரயில் நிற்கும் நடை மேடை வரை நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.இவர்களுக்கு உதவ, முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில், பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன.இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து, நாட்டின் முக்கியரயில்வே ஸ்டேஷன்களில், 'யாத்ரி மித்ர' என்னும் திட்டத்தை, ரயில்வே அமைச்சகம் விரைவில் துவக்க உள்ளது.இந்த திட்டத்தின் கீழ், பயணிகள் சேவை மையத்தில், சக்கரநாற்காலி, பேட்டரி கார் போன்றவற்றுடன், 'யாத்ரி மித்ர' என அழைக்கப்படும், ஊழியர்கள் காத்திருப்பர். தேவைப்படுவோருக்கு, சக்கர நாற்காலி அல்லது பேட்டரி காருடன் சென்று, உதவி செய்வர். இது குறித்து, கடந்த, 12ம் தேதி, அனைத்து ரயில்வே மண்டல தலைமை அலுவலகங்களுக்கும் ரயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.இந்த வசதியை பெற விரும்புவோர், '139' என்ற எண்ணுக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும் அல்லது தொடர்பு கொள்ள வேண்டும்.

Comments