நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?

நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?

'இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்துஉள்ளது.உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, பேராசிரியர் பணிக்கான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தேர்வு உட்பட, பல தேர்வுகளை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.'இது, கூடுதல் பணிச்சுமையாக உள்ளதால், நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் ஏற்படுத்தலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்து, கடிதம் அனுப்பி உள்ளது. எனவே, நுழைவுத்தேர்வுகளை நடத்த, அடுத்த ஆண்டில், தனி ஆணையம் அமைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Comments