மனிதர் யாரும் ஒருநிகர்!

மனிதர் யாரும் ஒருநிகர்!

1981-இல் மீனாட்சிபுரத்தில் ஒட்டுமொத்தமாக ஹிந்துக்கள், இஸ்லாத்தைத் தழுவினார்கள். அதேபோன்றதொரு அபாயச் சங்கு நாகப்பட்டினத்தில் இருந்து இப்போது ஒலிக்கிறது. ஜாதி ஹிந்துக்களின் அகந்தையை சிறிதளவாவது இந்த அபாயச் சங்கு கைவிடச் செய்ய வேண்டும்.கடந்த நூற்றாண்டில் தலித்துகள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர். அதனால், ஜாதி ஹிந்துக்களின் மேலாதிக்கத்துக்கு முன் அவர்கள் மண்டியிட நேர்ந்தது. ஆனால், இட ஒதுக்கீடு மற்றும் வலுவான ஜனநாயகத்தின் காரணமாக தலித் ஹிந்துக்கள் விழிப்படைந்துள்ளனர்.பல்வேறு உயர் பதவிகளில் அவர்கள் அமர்ந்துள்ளனர். தங்களை ஒதுக்கி வைக்கும் உயர்ஜாதி ஹிந்துக்களின் அநியாயப் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை.ஹிந்து தர்மத்தில் இருந்து விலகுவதை தலித்துகள் மகிழ்ச்சியாக மேற்கொள்கின்றனர் என்று கருதுவது மிகவும் தவறானது. தங்களுக்கு எதிராக ஜாதி ஹிந்துக்கள் நிகழ்த்தும் இரக்கமற்ற கொடிய அநீதி குறித்து எச்சரிக்கும் விதமாக கடைசிப் புகலிடமாக இந்த முடிவை எடுக்கின்றனர்.இந்த முடிவின் மூலம், தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதையும், தங்களது விரக்தி, கோபம், நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்த முனைகிறார்கள்.மறுபுறம், நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உயர் ஜாதி ஹிந்துக்கள் ஒரு கூட்டுக்குள் வாழ்கின்றனர். இறைவன் குறித்து பஜனை செய்தும், தங்களது உயர்ந்த மதப் பாரம்பரியத்தைப் புகழ்ந்து பாடியும் மிகப் பெரிய விழாக்களை நடத்தும்போது தாங்கள் ஏற்றுக் கொள்பவர்களை மட்டுமே அழைக்கிறார்கள்.சமூக நீதி கோரும் தங்கள் சகோதரர்களின் அலறல் சப்தத்தைக் கேட்காமலும், ஹிந்து சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள இன்னலை அறிய மறுத்தும் நெருப்புக் கோழிபோல ஜாதி ஹிந்துக்கள் செயல்படுகின்றனர்.கடந்த இரு நூறாண்டுகளாக, ஒதுக்கப்படுதலை ஒழிக்கவும், பண்டிட்டுகளும், "நம்பிக்கையின் பாதுகாவலர்கள்' என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களும் இந்தப் பிரச்னை குறித்து அறிவதற்கு பிராமண சமூகத்தில் இருந்து சில தலைவர்கள் உருவானார்கள் என்பது உண்மைதான்.தலித்துகளுக்கு கோயில் கதவுகளைத் திறந்துவிட வேண்டும் என்பது குறித்தும், பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்க தலித்துகளை அனுமதிக்க வேண்டும் என்பது குறித்தும் பிராமணர்களுக்குப் புரிய வைக்க அண்ணல் அம்பேத்கர் அரும்பாடுபட்டார். ஆனால், அவரது எண்ணம் ஈடேறவில்லை.அதன் காரணமாகத்தான், தான் ஹிந்துவாகப் பிறந்தாலும், ஹிந்துவாக இறக்கமாட்டேன் என்று கூறும் சூழ்நிலை உருவானது.அவரது தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஹிந்து மதத்தில் இருந்து புத்த மதத்துக்கு மாறினர். அவர் இவ்வாறு முடிவெடுத்தது ஒருவழியில் ஹிந்துக்களை பெருங்கேட்டிலிருந்து காப்பாற்றியது என்றே கூறலாம். ஒருவேளை அவர் இஸ்லாமிய மதத்துக்கோ, கிறிஸ்தவ மதத்துக்கோ மாறியிருந்தால் அதன் பின்விளைவுகள் ஹிந்து தர்மத்துக்குப் பேரழிவாக அமைந்திருக்கும்.ஜாதி ரீதியிலான வெறுப்புணர்வு மேலும் மேலும் அதிகரித்து வருவதை இப்போதும் காண்கிறோம். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பினும், அரசியலுக்கு இதில் பெரும் பங்குண்டு.தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை நடந்தவுடன் ஜாதி ஹிந்துக்களின் எதிர்வினையைப் பின்வருமாறு தொகுக்கலாம்: 1. பிரச்னைக்கு காரணம் அரசியல்தான். வேறு காரணம் எதுவும் இல்லை. 2. உள்ளூர் பிரச்னைக்காக ஏற்கெனவே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இரு உள்ளூர் குழுக்களின் முன்விரோதமே காரணம். 3. இது ஊடகங்களின் மிகைப்படுத்தல். 4. உள்ளூரில் நடைபெறும் சிறிய விஷயத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. 5. பொருளாதாரப் பிரச்னை, ஜாதிப் பிரச்னையாகிவிட்டது, இது காலப்போக்கில் மறந்துவிடும்.இந்த விளக்கங்கள் எதுவுமே ஏற்கத்தக்கவையாக இல்லாததுடன், தலித்துகளுக்கு உதவுவதாகவும் அமைவதில்லை. உயர்ஜாதி ஹிந்துக்களின் இந்த விளக்கங்கள் வெற்றுப் பேச்சுகளே. உயர்ஜாதி ஹிந்துக்களின் இந்தப் போலியான நடத்தையால், ஹிந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.இந்தப் புவியில் மிக உயர்ந்த உன்னத தத்துவங்களைக் கொண்ட ஹிந்து தர்மத்தை விட்டு பல லட்சக்கணக்கானோர் விலகியதற்கு உயர்ஜாதி ஹிந்துக்களின் இந்த செயல்களே காரணம்.நாகப்பட்டினத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள பழங்கள்ளிமேடு கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமையான பத்ரகாளியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா தடைபட்டது, உயர்ஜாதி ஹிந்துக்களின் அகந்தைக்கும், தர்மத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் சமீபத்திய உதாரணமாகும்.தலித்துகள் பூஜை செய்வதைத் தடுக்கவும், மண்டகப்படி நடத்துவதை தடை செய்யவுமே இந்த நடவடிக்கை. உயர்ஜாதி ஹிந்துக்கள் தங்களை காளியின் பக்தர்கள் என்று எவ்வாறு எண்ணிக் கொள்கின்றனரோ, அவ்வாறே தலித்துகளும் காளியின் பக்தர்களே.சுவாமி வீதி உலா தங்கள் பகுதி வழியாகவும் வர வேண்டும் என்பதே தலித்துகளின் வேண்டுகோள். இதை உயர்ஜாதி ஹிந்துக்கள் ஏற்கவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று கூறி ஆண்டுதோறும் நடைபெற்று வந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் இந்த ஆண்டு தடை விதித்துவிட்டார்.தலித்துகளின் கோரிக்கையை ஏற்பதைவிட விழா நடைபெறாமல் இருப்பதே மேல் என்று கருதிய உயர்ஜாதி ஹிந்துக்களின் எண்ணத்துக்கேற்ப ஆட்சியரின் நடவடிக்கை அமைந்தது.தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்ளும் மனப்பான்மைக்கு இதைவிட வேறு சான்று இருக்கமுடியுமா? சுவாமி விவேகானந்தரால் வலியுறுத்தப்பட்டு, எல்லாவிதமான ஒடுக்குதல்களையும் சந்தித்தபோதும், பழைமையான தனது தர்மத்தை விட்டு விலகும் எண்ணம் சிறிதும் இல்லாமல், மிகுந்த பக்தியுடன் பாபு ஜகஜீவன்ராம் கடைப்பிடித்த ஹிந்து தர்மம் இதுதானா?ஹிந்து சமூகத்தின் சில பிரிவினரால், தங்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக கொடுமைகள் நிகழ்த்தப்பட்டபோதும், தர்மம் என்ற ஜோதியை அணையாமல் பல நூற்றாண்டுகளாகக் காத்துவரும் தலித்துகளுக்கு நன்றி உடையவர்களாக இருப்பதற்குப் பதில் ஹிந்து தர்மத்தைக் காட்சிப் பொருளாக ஆக்குபவர்களாக சிலர் செயல்பட்டு வருகின்றனர்.நகர்ப்புறப் பகுதிகளில் ஜாதி உணர்வு மறைந்து வருகிறது என்றும், கலப்புத் திருமணங்கள் மூலம் புதியதொரு இளம் தலைமுறை மலர்ந்து வருகிறது என்றும் நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கிறோம். இதுபோன்ற குரல்கள் ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் காலத்தில் இருந்தே ஒலித்து வருகின்றன.ஏற்றத் தாழ்வுக்கு எதிரான குரல்கள் திருவள்ளுவர், கனகதாசர், கபீர், குரு நானக், சாஹுஜி மகராஜ் உள்ளிட்ட பல்வேறு மகான்களின் படைப்புகளில் எதிரொலிப்பதைக் காண முடிகிறது. ஆனால், நடைமுறையில் வேறுமாதிரியாக உள்ளது. இப்போதும் செய்தித் தாள்களில் வெளியாகும் மணமகன், மணமகள் தேவை விளம்பரங்களில் ஜாதி பிரதானமாக உள்ளதைக் காண்கிறோம்.தாங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றே தலித்துகள் எதிர்பார்க்கின்றனர். அது அவர்களது பிறப்புரிமை. எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் தலித்துகளுக்கு கோயில்கள் திறந்துவிடப்படுவதையும், திருவிழாக்களில் அவர்கள் பங்கேற்பதையும் அரசு உறுதி செய்யவேண்டும். நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்ற பெயரில் ஏற்றத் தாழ்வை ஊக்குவிப்பவர்கள் ஹிந்து தர்மத்துக்கு கெடுதலையே செய்கிறார்கள்.மற்றவர்களின் வேதனையைப் பயன்படுத்திக் கொள்ளும் மத "வர்த்தகர்'களுக்கு இது ஹிந்து சமூகம் தொடர்பான பிரச்னை என்பதைப் புரிய வைக்க வேண்டும். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைத்து பைபிளையும், குரானையும் விநியோகம் செய்பவர்கள் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.அவர்கள் முதலில் தங்கள் மதத்தில் உள்ள குறைகளைக் களைய முற்பட வேண்டும். ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும், காஷ்மீர் ஜிஹாதிகளுக்கும் குரானின் உண்மையான கருத்தைப் புரிய வைக்க வேண்டும். தலித்துகளுக்கு தனி சர்ச் இருப்பதையும், கன்னியாஸ்திரி தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் அவர்கள் கவனம் செலுத்தட்டும்.தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளும் வலிமை ஹிந்து சமூகத்துக்கு உள்ளது என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனித நடத்தை குறித்து பின்வரும் குறள்கள் தெளிவுபடுத்துகின்றன:

தீயவை தீய பயத்தலால் தீயவை

Comments