சாலை விபத்துகளை தடுக்க தானியங்கி எச்சரிக்கை கருவி தரங்கம்பாடி தன்னார்வலரின் புதிய முயற்சி

சாலை விபத்துகளை தடுக்க தானியங்கி எச்சரிக்கை கருவி தரங்கம்பாடி தன்னார்வலரின் புதிய முயற்சி

சாலை விபத்துகளைத் தடுக்க அரசு பல வழிகளைக் கடைபிடித்து வருகிறது. அப்பணியில் அரசோடு தங்களை இணைத்துக்கொண்டு பல்வேறு சேவை அமைப்புகள் பணியாற்றி வருகின்றன. நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த தன்னார் வலர் ஒருவர், தங்கள் பகுதியில் அடிக்கடி நேரிடும் சாலை விபத்து களைத் தடுக்க தானே ஒரு தானி யங்கி எச்சரிக்கைக் கருவியைத் தயார் செய்துள்ளார். அதனை, விபத்து நேரிடும் பகுதியில் வைத்து பல உயிரிழப்புகளைத் தடுத்தும் வருகிறார். சீர்காழியில் இருந்து நாகப்பட்டி னம் செல்லும் சாலையில் தரங்கம் பாடி பேருந்து நிறுத்தத்தை அடுத் துள்ள ஆற்றுப் பாலத்தை கடந்ததும் சாலை வலது புறமாக வளைந்து செல்லும். அந்த இடத்தில் எந்த வித எச்சரிக்கை அறிவிப்பும் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நேரிட்டன. அதிலும், காரைக்கால் பகுதியில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் விபத்துக்குள்ளாயின. கடந்த ஒரு மாதத்துக்குள் 3 விபத்துகள் நேரிட் டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்தே, தான் தயாரித்த தானியங்கி எச்சரிக்கைக் கருவியை அங்கு பொருத்தியுள்ளார் தரங்கம் பாடி ஹைடெக் ரிசர்ச் பவுண்டே ஷன் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர் முரளி. இக்கருவியின் உச்சியில் சிவப்பு நிற எல்.இ.டி. விளக்குகள் விட்டுவிட்டு ஒளிர்ந்து தூரத்தில் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கின்றன. கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள 2 ஒலிப்பான்களில், 'இது விபத்து பகுதி, மெதுவாக செல்லுங்கள், விபத்து ஒரு எதிர்பாராத அழிவு, தலைக்கவசம் உயிர் கவசம்' என்பன போன்ற பல்வேறு வாசகங் கள் ஒலித்துக்கொண்டே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களை சுதாரித்துக்கொண்டு எச்சரிக்கையு டன் செல்கின்றனர். எனவே விபத்து கள் நேரிடுவது தவிர்க்கப்படுகிறது. இக்கருவி சூரிய மின்சக்தி மூலம் இயங்குகிறது. அதற்கான தகடுகள் அந்தக் கம்பத்திலேயே பொருத்தப்பட்டு, அதில் சூரியஒளி மின்சாரத்தைச் சேமித்து வைக்க ஒரு மின்கலமும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு பகல் எந்நேரமும் இக்கருவி தடையின்றி இயங்கு கிறது. இதுகுறித்து அக்கருவியை தயாரித்த முரளி, 'தி இந்து'விடம் கூறியபோது, "எங்கள் வீடு, அலுவல கம் அமைந்துள்ள இப்பகுதியில் ஒவ்வொரு நாளும் விபத்துகளைப் பார்க்கும்போது மனம் வேதனைப் படுகிறது. இவ்விபத்துகளைத் தவிர்க்க நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தபோது தான் இந்த எண்ணம் உதித்தது. உடனே, இதைச் செயலாக்கினேன். சுமார் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானது. ஆனால், இதன் பயனோ விலைமதிக்க முடியாதது. இது உயிர்களைக் காப்பதில் பெரிதும் உதவியாக உள்ளது. இவ்வழியாக வழக்கமாக செல்லும் லாரி ஓட்டுநர்கள் பலர் என்னைச் சந்தித்து வாழ்த்தியபோதுதான் இக்கருவியின் பயனை என்னால் உணர முடிந்தது" என்றார். நாட்டில் எது நடந்தால் நமக் கென்ன என்று இல்லாமல் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கின்ற இளைஞர்கள் அதிக மானால்தான் ஒட்டுமொத்த இந்தியா வின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள விபத்து தடுக்கும் தானியங்கி எச்சரிக்கைக் கருவி.

 

 

Comments