விலங்குகள் அழிந்தால் காடுகள் நிலை குலையும்

விலங்குகள் அழிந்தால் காடுகள் நிலை குலையும்

காட்டில் தாவரங்களை உண்ணும் பெரிய விலங்குகளான யானைகள், காண்டா மிருகங்கள் போன்றவை வெகு வேகமாக அழிந்து வருகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகளை ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. உகாண்டாவிலுள்ள ராணி எலிசபெத் தேசிய பூங்காவில் கடந்த, 40 ஆண்டுகளாக யானை, காண்டா மிருகம் போன்ற பெருந்தாவர உண்ணி இனங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. இதன் தாக்கத்தை கெந்த்ரா கிரிட்ஸ் என்ற ஆய்வாளரின் தலைமையில் ஒரு குழு பல ஆண்டு ஆராய்ச்சி மேற்கொண்டது. குறிப்பாக காண்டா மிருகத்தின் பற்களை, ஐசோடோப்புகள் மூலம் அவர்கள் ஆராய்ச்சி செய்தனர். பல ஆண்டுகளாக சேகரித்த காண்டா மிருக பற்கள், அந்தந்த காலகட்டத்தில் காண்டா மிருகங்கள் என்ன வகையான தாவரங்களை பெருவாரியாக உட்கொண்டன என்பதை இதன் மூலம் அறிய முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இதன் படி பார்க்கையில், எலிசபெத் தேசிய பூங்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க வனப் பகுதிகளில் காண்டா மிருகங்களின் தாவர உணவு முறையே கடந்த, 40 ஆண்டுகளாக மாறியிருப்பது ஆய்வில் தெரிய வந்தது. யானைகளும், காண்டா மிருகங்களும் குறையாமல் இருந்தால், அவை உண்ணும் பெரிய தாவரங்களின் கட்டுக்கடங்கிய வளர்ச்சி தடுக்கப்பட்டிருக்கும். புல்வெளிகளும், சிறு தாவரங்களும் குறையாமல் இருந்திருக்கும். இப்படி வனப் பகுதிகளில் ஒவ்வொரு விலங்கும் குறைய குறைய அதன் பாதிப்பு வனச் சூழலில் வலுவாக உணரப்படும் என்கின்றனர் வனவியல் வல்லுனர்கள்

Comments