விமான விபத்தும், செல்போன் பேச்சும்

விமான விபத்தும், செல்போன் பேச்சும்

விமானத்தில் செல்லும் போது செல்போனில் பேசக்கூடாது என்பார்கள். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா, நண்பர்களே? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைத் தொடர்ந்து படியுங்கள்!

விமானத்தில் செல்லும் போது செல்போனில் பேசினால் நாம் பேசும் அலைக்கற்றையானது, விமானத்தின் தொடர்பு அலைக்கற்றையுடன் குறுக்கிட்டு விமானத்தினை தவறான பாதைக்கு கொண்டு சென்று விபத்து வழிவகுக்கும். இது தான் நாம் இதுவரை நினைத்திருந்த காரணம். ஆனால் இது தவறான கருத்து!

உலகளவில் விமானக் குழுவினை வழிநடத்தும் அமைப்பான FAA கடந்த 25 ஆண்டுகளாக அனைத்து விதமான மின்னணு சாதனங்களின் அலைக்கற்றையினை அல்லது அதிர்வெண்ணினை விமானத்தின் தொடர்புக்கான ரேடியோ அலைக்கற்றையுடன் ஒப்பிட்டு விளைவுகளை எதிர்பார்த்தனர். ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாம் மின்னணு சாதனங்களை விமானத்தில் உபயோகிப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அதிகாரப்பூர்வமாகவே அவர்கள் அறிவித்துள்ளனர்.

பின்பு ஏன் விமானத்தில் செல்லும் போது மின்னணு சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள்?

நாம் விமானத்தில் பணிபுரிவர்களுடன் சரியான ஒத்துழைப்பு கொடுப்பதற்காக அதை வழிநடத்தும் நிறுவனத்தினால் கேட்டுக்கொள்ளப்படும் ஒரு சிறு கோரிக்கை மட்டுமே. ஏன், ஒரு சில விமான நிறுவனங்கள் செல்போன்களை கூட அனுமதிக்கின்றன!

Comments