நூலகர், காப்பாளர் காலி பணிக்கு அக். 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

நூலகர், காப்பாளர் காலி பணிக்கு அக். 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

விருதுநகரில் உள்ள காமராஜர் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவு மணி மண்டபத்தில், காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியது: விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர்) முன்னுரிமையற்றவர் (அருந்ததியினர் இல்லாத நிலையில்) இனசுழற்சி அடிப்படையில் ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இதற்கான வயது வரம்பு 01.07.2016 அன்று 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். நூலக அறிவியல் படிப்பில் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். தகுதியுடையவர்கள், உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 10 க்குள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment