10ம் வகுப்பு துணை தேர்வு:அசல் சான்றிதழ் வினியோகம்

10ம் வகுப்பு துணை தேர்வு:அசல் சான்றிதழ் வினியோகம்

பத்தாம் வகுப்பு, சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு, வரும், 19 முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூன், ஜூலையில், 10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஜூலை, 28 முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ், அக்., 25 வரை மட்டுமே செல்லும். அசல் சான்றிதழ், வரும், 19 முதல், 26 வரை, தேர்வு மையங்களில் வழங்கப்படும்.ஞாயிறு தவிர்த்து, அலுவலக நேரங்களில், சான்றிதழை பெற்று கொள்ளலாம். அக்.,26க்கு பின், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், சான்றிதழ் கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments