விமானப்படைக்கு விண்ணப்பிக்க அக்., 13 கடைசி

விமானப்படைக்கு விண்ணப்பிக்க அக்., 13 கடைசி

விருதுநகர்: விமானப்படையில் சேர விருப்பமுள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்க அக்., 13 கடைசி என வேலைவாய்ப்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். அதில், மேலும் கூறியிருப்பதாவது: இந்திய விமான படையில் ஏர்மேன் பிரிவிற்கு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமணம் ஆகாதவர்கள் விண்ணப்பிக்காலம். மேலும் கல்வி தகுதியாத தொழிற் கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் www.airmenselection.gov.in என்ற இணையதள முகவரியில் விண் ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கான தேர்வு ஜன., பிப்., மாதங்களில் நடைபெறும். விண்ணப்பிக்கும் இளைஞர்கள் 7.7.1997 முதல் 20.12.2000 க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதன் பிரதி எடுத்து, கல்வி மற்றும் வயது சான்றிதழ் இணைத்து மத்திய விமான பணியாளர் தேர்வாணையத்திற்கு அக்., 13-க்குள் அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Comments