SCROL

Sunday, October 2, 2016

இனி பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல்???

இனி பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல்???

ரயில்வே பட்ஜெட்டும், மத்திய பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இனி ஒரே பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்படுவதால் பார்லி., நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைக்கும்படி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதினார்.இதைத் தொடர்ந்து பார்லி., நிகழ்ச்சி நிரல் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் மாதம் 12-ந்தேதி கூடுகிறது. டிசம்பர் 12-ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவது தொடர்பான இதர மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. 2017-ல் ஜனவரி 12-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.ஒரு மாதம் நடைபெறும் கூட்டத்தொடருக்கு பின் 2-வது கட்டமாக மார்ச் 12-ந்தேதி பார்லி.,யின் இரு அவைகளும் கூடி மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறும். மாற்றி அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நிரல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு இது அமல்படுத்தப்பட உள்ளது.

 

No comments:

Post a Comment