SCROL

Friday, October 28, 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு-மந்திரிசபை கூட்டத்தில் முடிவு. ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு-மந்திரிசபை கூட்டத்தில் முடிவு. ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில், 7-வது மத்திய ஊதிய குழு சிபாரிசின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் 50 லட்சத்து 68 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 54 லட்சத்து 24 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 622 கோடியே 10 லட்சம் கூடுதல் செலவு ஆகும். கடந்த ஜூலை முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலான 8 மாதங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 748 கோடியே 6 லட்சம் கூடுதல் செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.7-வது ஊதிய குழு சிபாரிசின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு (2015) செப்டம்பர் மாதம் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் அகவிலைப்படி உயர்வு 119 சதவீதம் ஆனது.

 

 

 

 

 

No comments:

Post a Comment