இக்நோபல் பரிசுகள் 2016

இக்நோபல் பரிசுகள் 2016

ஆண்டுதோறும் சாத்தியமில்லாத, முக்கியமில்லாத அறிவியல் சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு, 'இக்நோபல்' பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளை, 'அன்னல்ஸ் ஆப் இம்ப்ராபபிள் ரிசர்ச்' என்ற இதழின் ஆசிரியர்களும் சில அசல் விஞ்ஞானிகளும் சேர்ந்து வழங்குகின்றனர். இந்த விருதுகள் அமெரிக்காவிலுள்ள மதிப்பு மிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அரங்கு ஒன்றில் சமீபத்தில் வழங்கப்பட்டன. கடந்த பத்து வருடங்களாக முதல் பரிசை வெல்வது ஜப்பானிய விஞ்ஞானிகள் தான்! இந்த வருடம், ஒசாகா பல்கலைக்கழகத்தின் கோஹேய் அடாசி மற்றும் ரிட்சுமேய்கன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அட்சுகி ஹிகாஷியாமா ஆகிய இரு ஜப்பானிய விஞ்ஞானிகளும் முதல் பரிசை வென்றனர். கால்களை அகட்டி நின்று குனிந்து, கால்களுக்கு இடையே தலையை வைத்துப் பார்க்கையில், தென்படும் பொருட்களும் அவற்றின் துாரமும் சிறியதாகத் தெரியும் என்பதுதான் அவர்களது கண்டுபிடிப்பு!இருவரும் இந்த கண்டுபிடிப்பை ஒரு ஆய்விதழில் கட்டுரையாக எழுதியிருக்கின்றனர். 'மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்வதே இக்நோபல் விருதுகளின் நோக்கம். எது முக்கியம், எது வீண், எது உண்மை, எது உண்மை அல்ல என்பதை அறிவியலிலும், பிற துறைகளிலும் இருப்பவர்களை உணரச் செய்வதே எங்கள் விருதுகளின் நோக்கம்' என்று விருது கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். இந்த விழாவில், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட பல அறிவியலாளர்கள் தவறாமல் கலந்துகொள்கின்றனர். அதுமட்டுமல்ல, முதல் பரிசு பெற்றவர்களுடன் மேடையில் வந்து குனிந்து நின்று, ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பு உண்மைதானா என்று சோதித்தும் பார்த்தனர்!

No comments:

Post a Comment