மாற்றுத்திறனாளிகள் நலன் விருது அக்., 28க்குள் விண்ணப்பிக்கலாம் !!

மாற்றுத்திறனாளிகள் நலன் விருது அக்., 28க்குள் விண்ணப்பிக்கலாம் !!

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, சிறப்பான பணிபுரிந்தோருக்கான, தமிழக அரசின் விருதுக்கு, வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, பணியாற்றிய தனிநபர், ஆசிரியர், சமூக பணியாளர், தொண்டு நிறுவனம், வேலைவாய்ப்பு அளித்த நிறுவனம் உட்பட, 15 பேருக்கு,   மாற்றுத்திறனாளிகள் தினமான, டிச., 3ல், விருதுகளை வழங்க உள்ளது; விருதில், 10 கிராம் தங்க பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருதுகளுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பரிந்துரையுடன், மாற்றுத்திறனாளிகள் மாநில கமிஷனருக்கு, அக்., 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.scd.tn.gov.in இணைய தளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; சென்னை, கே.கே.நகரில் உள்ள, மாநில மாற்றுத்திறனாளிகள் நல கமிஷனர் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment