பருவமழையால் 2௦ இடங்களில் பாதிப்பு ஏற்படும்– மாவட்ட ஆட்சியர்!

பருவமழையால் 2௦ இடங்களில் பாதிப்பு ஏற்படும்மாவட்ட ஆட்சியர்!

வடகிழக்கு பருவமழையால் 2௦ இடங்கள் அதிகமாக பாதிக்கப்படலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் ஏரி, செக்கஞ்சேரி, புதுக்குப்பம், கொசஸ்தலை ஆகிய ஆறு வடிகால் கால்வாய்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார். அம்மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி மற்றும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கிய ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களும் சரி செய்யப்பட்டு வருகிறது. பங்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் சுமார் 12 கி.மீ தூரம் கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சென்ற ஆண்டு பெய்த பருவ மழையைப் பொறுத்து 2௦ இடங்கள் பாதிக்கப்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதிகளைக் கண்காணிக்க ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மீட்பு படையினர் என 5௦-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பருவமழைக்கும் முன்னதாகவே அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாக தயாராக இருக்கிறது" என்று கூறியுள்ளார். இந்த ஆய்வில் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழையினால் பொருள் சேதமும் உயிர் சேதமும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment