விமான நிறுவனத்தில் 300 வேலைகள்

விமான நிறுவனத்தில் 300 வேலைகள்

விமான நிறுவனத்தில் 'கேபின் குரூவ்' பணியிடங்களுக்கு 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இது பற்றிய விவரம் வருமாறு:-'ஏர் இந்தியா' நிறுவனம் இந்திய பொதுத்துறை விமான நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் 'டிரெயினி கேபின் குரூவ்' பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 75 இடங்களும், பெண் விண்ணப்பதாரர்களுக்கு 225 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.பெண்களுக்கான பணியிடங்களில் இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்கு 107 இடங்களும், .பி.சி. பிரிவினருக்கு 63 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 16 இடங்களும் உள்ளன.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-10-2016 தேதியில் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், .பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

பிளஸ்-2 தேர்ச்சியுடன், ஓட்டல் மேனேஜ்மென்ட்/கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட டிப்ளமோ அல்து பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.

உடல் தகுதி:

விண்ணப்பதாரர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் குறைந்தபட்சம் 172 செ.மீ. உயரமும், பெண்கள் 160 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். எடை, மார்பளவு, பார்வைத்திறன் ஆகியவை குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

குழுவாக செயலாற்றும் திறன் தேர்வு மற்றும் ஆளுமைத்திறன் தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பம் 8-11-2016-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.airindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

 

 

No comments:

Post a Comment