எம்.டி., சித்தா 31ல் கலந்தாய்வு

எம்.டி., சித்தா 31ல் கலந்தாய்வு

எம்.டி., சித்தா, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, ஒற்றை சாளர முறை கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம், அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள, தேர்வுக் குழு அலுவலகத்தில், 31ல் நடைபெற உள்ளது. அன்று காலை, 11:00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு தகவல், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, கடிதம் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப் பெறாதோர், 'www.tnhealth.org' என்ற இணையதளத்தில், அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள், கலந்தாய்வு நாளில், அசல் சான்றிதழ்களுடன், 5,500 ரூபாய்க்கான, 'டிடி'யுடன் கலந்து கொள்ள வேண்டும். 'அன்றைய தினமே, சான்றிதழ்களை சமர்ப்பித்து, கல்லுாரியில் இணைந்து கொள்ள வேண்டும்' என,இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

No comments:

Post a Comment