அரசு ஊழியர்களுக்கு 31-ந்தேதி சம்பளம் வழங்கப்படும் தமிழக அரசு தகவல்

அரசு ஊழியர்களுக்கு 31-ந்தேதி சம்பளம் வழங்கப்படும் தமிழக அரசு தகவல்

அரசு ஊழியர்களுக்கு 31-ந்தேதியன்று சம்பளம் வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.தமிழக அரசு கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் சார்பில் நேற்று இரவில் அவசர சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-28.10.16 அன்று அக்டோபர் மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை மீது கவனம் ஈர்க்கப்படுகிறது. அந்த அரசாணையை அமல்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஆனால் முன்னதாக நிதித்துறை (கருவூலக் கணக்கு) சார்பில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திடம் இருந்து கடிதம் பெறப்பட்டது. அதில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை 29-ந்தேதியன்று வருகிறது. எனவே தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.28-ந்தேதி வழங்கலாம். இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்தது. அக்டோபர் மாத ஊதியத்தை 28.10.16 அன்றே வழங்க, சம்பந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய தெளிவுரையை வழங்க கருவூல கணக்கு ஆணையருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.சம்பளத்தை 28-ந்தேதியன்றே வழங்க வேண்டும் என்ற அரசாணையால் தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் அந்த அரசாணையை தவிர்க்கும்படி சுற்றறிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து சிறிது நேரத்துக்குள் பரபரப்பு அடங்கியது.இதையடுத்து அரசு ஊழியர்களுக்கு வழக்கம் போல் 31-ந்தேதி அன்று சம்பளம் வழங்கப்படுகிறது,

No comments:

Post a Comment