SCROL

Friday, October 21, 2016

இணையதள மோசடி அபாயம் எதிரொலி-32 லட்சம் ஏ.டி.எம். அட்டைகள் முடக்கம்-வங்கிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

இணையதள மோசடி அபாயம் எதிரொலி-32 லட்சம் .டி.எம். அட்டைகள் முடக்கம்-வங்கிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

இணையதள மோசடி அபாயத்தில் சிக்கி உள்ள 32 லட்சத்துக்கும் மேற்பட்ட .டி.எம். அட்டைகளை சம்பந்தப்பட்ட வங்கிகள் முடக்கவும், திரும்ப பெறவுமான நடவடிக்கையை எடுத்துள்ளன.இந்தியாவில் உள்ள சில வங்கிகள் வழங்கிய .டி.எம். அட்டைகள், இணையதள மோசடி கும்பலின் அச்சுறுத்தலுக்கு இலக்காகி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. .டி.எம். அட்டையில் உள்ள ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட பாதுகாப்பு குறியீடுகளை திருடி, அக்கும்பல் பண மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.யெஸ் வங்கி என்ற தனியார் வங்கியின் .டி.எம்.களில் பணம் நிரப்பும் வேலையை ஹிடாச்சி பேமண்ட் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி பாதுகாப்பு குறியீடு திருட்டு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த மே மாதத்தில் இருந்து ஜூலை மாதத்துக்குள் இந்த திருட்டு நடந்துள்ளது. ஆனால், கடந்த மாதம்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, .டி.பி.. வங்கி, சென்டிரல் வங்கி, ஆந்திரா வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, யெஸ் வங்கி ஆகிய வங்கிகளின் வாடிக்கையாளர்களுடைய .டி.எம். அட்டைகள், இணையதள மோசடி கும்பலின் அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ளன. 32 லட்சத்துக்கும் மேற்பட்ட அட்டைகளுக்கு இந்த அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவந்துள்ளது.இதையடுத்து, அந்த வங்கிகள் உஷார் அடைந்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களின் 6 லட்சம் .டி.எம். அட்டைகளை திரும்ப பெற்றுள்ளது. சில அட்டைகளை முடக்கி உள்ளது. பேங்க் ஆப் பரோடா, .டி.பி.. வங்கி, சென்டிரல் வங்கி, ஆந்திரா வங்கி ஆகிய வங்கிகள், அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ள அட்டைகளை முடக்கி விட்டு, மாற்று அட்டைகள் வழங்கி உள்ளன..சி..சி.. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, யெஸ் வங்கி ஆகிய வங்கிகள், .டி.எம். அட்டையின் ரகசிய குறியீட்டு எண்ணை (பின்) மாற்றுமாறு வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளன. எச்.டி.எப்.சி. வங்கி, தனது .டி.எம்.களில் மட்டுமே பணம் எடுக்குமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இந்தவகையில், 32 லட்சத்துக்கும் மேற்பட்ட அட்டைகளும் முடக்கம் அல்லது திரும்ப பெறும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.இதற்கிடையே, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச்சேவை துறை, இந்த விவகாரம் பற்றியும், இதன் பாதிப்புகள் பற்றியும் இந்திய வங்கிகள் சங்கத்திடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது.இதுபோன்ற மோசடிகளை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கேட்டுள்ளது.

No comments:

Post a Comment