அஞ்சல் துறை வங்கி சேவை: 3,500 உயர் பதவிகளுக்கு ஆள் சேர்ப்பு

அஞ்சல் துறை வங்கி சேவை: 3,500 உயர் பதவிகளுக்கு ஆள் சேர்ப்பு

சென்னை: இந்திய அஞ்சல் துறை வழங்கீட்டு வங்கியில் (ஐ.பி.பி.பி.) உயர் பதவிகளுக்கு ஆள் சேர்க்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது.

புதுதில்லியை தலைமையிடமாக கொண்டு, நாடு முழுவதும் 650 கிளைகளுடன் இந்த வங்கி 2017-ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் தொடங்கி, கிளைகளை நிறுவும் பணி நடந்துவருகிறது.

இந்த வங்கியின் தலைமைச் செயல் அலுவலர், மேலாண் இயக்குநர், தலைமைத் தொழில்நுட்ப அலுவலர் (சி.டி.ஓ.) பணியிடங்கள், வங்கியின் இயக்கம், விபத்துத் தடுப்பு, நிதி, மனித வளம், நிர்வாகம், விற்பனை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளுக்குப் பணியாளர்கள் போன்றவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

3,500 பணியிடங்களுக்கு..: இதேபோல், இதர பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு குறித்து அறிவிப்பும் ஒரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், பெரு நிறுவன தலைமையிடத்திலிருந்து குறிப்பிட்ட பணியிடங்களுக்கு பொதுத்துறை வங்கிகளிலிருந்து மாற்று பணியாளர்களர்களையும், இதர அரசுத் துறைகளிலிருந்து மாற்றுப் பணி அலுவலர்களும் அழைக்கப்பட உள்ளனர்.

இதன்படி, அடுத்து வரும் மாதங்களில் 3,500 பணியாளர்களை நியமிக்க அஞ்சல் துறை வங்கி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் இந்தியா போஸ்ட் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment