அரசு ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 908 போனஸ் வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு.

அரசு ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 908 போனஸ் வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு.

தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையை சேர்ந்த அனைத்து ரேசன்  அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  கூறியதாவது:தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையை சேர்ந்த அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படும். இதன் மூலம் 3 லட்சத்து 21 ஆயிரத்து 421 ரேசன் கார்டுதாரர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2 கோடியே 56 லட்சம் செலவாகும்.இதேபோல் அரசு ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 908 போனஸ் வழங்கப்படும். இதன் மூலம் 26 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள். மேலும் தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1184 போனசாக வழங்கப்படும். இதனால் 5 ஆயிரம் தினக்கூலி ஊழியர்கள் பயன் பெறுவார்கள். பகுதி நேர ஊழியர்களுக்கு ரூ. 1000-ம் போனசாக வழங்கப்படும். இது போல் அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் வரை போனஸ் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment