KALVISOLAI TNPSC

Sunday, 2 October 2016

இனிமையான வாழ்வருளும் இரட்டை லிங்கேஸ்வரர்

இனிமையான வாழ்வருளும் இரட்டை லிங்கேஸ்வரர்

பல்லவர் காலம் முதல் பிற்கால சோழர்காலம் வரை சிறப்புற்று விளங்கிய சென்னியமங்கலம் 13ம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்பால் கொள்ளையடிக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் சீர்குலைந்தது. மூன்று வருடங்களுக்கு முன் ஊருக்கு பொதுவான திடலில்  செடி கொடிகளை சுத்தம் செய்தபோது மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. இதன் உயரம் 4 அடி, பீடம் 5 அடி சுற்றளவு. அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் மற்றொரு சிவலிங்கம் இதைவிட சற்று சிறிய அளவினதாகக் கிடைத்தது. சிறிய கீற்று கொட்டகை அமைத்து அதனுள் இரு லிங்கங்களையும் வைத்து, உண்ணாமுலை அம்பிகா சமேத அருணாச்சலேஸ்வரர், மீனாட்சி அம்பிகா சமேத சொக்கநாதர் என்று பெயர்கள் இட்டார்கள் பக்தர்கள். இக்கோயிலில் திங்கட்கிழமை, அமாவாசை, பெளர்ணமி நாட்களில்  இரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்கிறார்கள். மகாசிவராத்திரி, கார்த்திகை கடைசி சோமாவாரம் (திங்கட்கிழமை), கார்த்திகை மாத தீபம்ஐப்பசி அன்ன அபிஷேகம், சித்ரா பெளர்ணமி சுமங்கலி பூஜை ஆகியன மிகச் சிறப்பாகநடைபெற்று வருகின்றன.இக்கோயிலின் தலவிருட்சமாக வில்வ மரமும், அரச மரமும் இணைந்துள்ளன. குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த மரத்தை சுற்றி வந்தால், இரட்டை லிங்கேஸ்வரர் அருளினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. இரவு நேரங்களில் பாம்பு ஒன்று அருணாச்சலேஸ்வரர் மேல் படுத்துவிட்டு பகல் நேரங்களில் வெளியே செல்லும் அற்புதம் நிகழ்கிறது என்கிறார்கள். இரட்டை லிங்கேஸ்வரரை ஒரே நேரத்தில் வழிபட்டால் புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், கடன் தொல்லை எல்லாம் நிவர்த்தியாகும், மனக்கஷ்டம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கும்பகோணம் ஆலங்குடி-மன்னார்குடி சாலையில் திப்பிராஜபுரத்தில் உள்ள சென்னியமங்கலம் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

No comments:

Post a comment