சமையல் நெருப்பில் சார்ஜ் ஏற்றலாம்!

சமையல் நெருப்பில் சார்ஜ் ஏற்றலாம்!

ஸ்மார்ட்போன் கருவிகளின் சார்ஜ் பிரச்சினையை தீர்க்க விஞ்ஞான உலகம் பல்வேறு கருவிகளையும், தீர்வுகளையும் கண்டு வருகிறது. கென்யா நாட்டு மக்களின் வாழ்க்கைச் சூழல் மற்றும் தேவைக்கு ஏற்ப அடுப்பெரிக்கும் நெருப்பில் இருந்து சார்ஜ் செய்து கொள்ளும் கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினர் இதற்காக 'ஜிகோபவர்' என்னும் சாதனத்தை வடிவமைத்து கொடுத்துள்ளனர். எளிமையான உலோக தகடுகளைக் கொண்ட இந்த சாதனம், வெப்பக் கடத்தலில் இருந்து அனல் மின்சாரத்தை தயாரிக்கிறது. 2 முதல் 6 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த சாதனத்தை ஸ்மார்ட்போன்களை சார்ஜ் ஏற்ற பயன்படுத்திக் கொள்ளலாம்."கென்யாவில் 80 சதவீதம் பேர் செல்போன்களை பயன்படுத்தினாலும், 20 சதவீதம் பேருக்குத்தான் தேவையான அளவு மின்சாரம் கிடைக்கிறது. அவர்களின் மின்சார தேவையை இந்த வழியில் தீர்க்க முடியாவிட்டாலும், சார்ஜ் பிரச்சினைக்கு இது தீர்வாக இருக்கும். உகாண்டாவிற்கும் இதை வழங்க இருக்கிறோம்" என்கிறார்கள் ஆய்வுக்குழுவினர்.

No comments:

Post a Comment