சனி கிரக நிலவில் தண்ணீர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சனி கிரக நிலவில் தண்ணீர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சனிக்கிரகத்தின் டையோன் நில விலும் நிலத்தடிக்கு கீழே பல கிலோ மீட்டர் ஆழத்தில் கடல் ஓடு வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர். இதன் மூலம் அங்கு நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. சனிக்கிரகத்தை சுற்றும் டைட்டன், என்சலடஸ் ஆகிய இரு நிலவுகளும் பனிக்கட்டிக்கு அடியில் கடலை மறைத்து வைத்திருப்பதாக ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. இந்நிலையில் மற் றொரு நிலவான டையோனிலும் கடல் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. பெல்ஜியத்தின் ராயல் ஆய்வக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித் துள்ளனர். டையோன் நிலவின் நிலத் தடிக்கு கீழே 100 கி.மீ ஆழத்தில் அந்தக் கடல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த கடலைச் சுற்றி மிகப் பெரிய பாறை படிமங்கள் அமைந் திருப்பதாகவும் கூறுகின்றனர். இதன் மூலம் நீண்ட ஆயுள் கொண்ட நுண்ணுயிர்கள் அங்கு வாழ்வதற் கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. சனி கிரகம் அருகே சுற்றி வரும் டையோன் நிலவு.  

No comments:

Post a Comment