பறக்கும் பரவசம் தரும் கூண்டு

பறக்கும் பரவசம் தரும் கூண்டு

மனிதனின், பறவைபோல பறக்கும் ஆசையில் பிறந்ததுதான் விமானம். குழந்தைகளுக்கு ஊஞ்சல் ஆடுவது பறப்பது போன்ற பிரமையைத் தந்து மகிழ்வூட்டும். சில பொழுதுபோக்கு பூங்காக்களுக்குச் சென்றால் ராட்சத ராட்டின கருவிகள் பறப்பதுபோன்ற அனுபவத்தை தருகின்றன. இதுபோல வீட்டில் இருந்தபடியே அனைவரையுமே பறக்கும் பரவசத்தை அனுபவிக்க வைக்க ஒரு பறவைக்கூண்டு தயாராகிவிட்டது.

பிரான்கோபர் ஐ.பி.ஏ. ஆய்வு நிறுவனம், எம்.பி.ஐ. எனும் மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து கம்பி வடத்தில் இயங்கும் எந்திர கூண்டை வடிவமைத்துள்ளது. 8 கம்பிகள் மற்றும் உருளைகளில் இந்த கூண்டு இணைக்கப்பட்டிருக்கும். அறையின் 8 மூலையிலும் பொருத்தப்படும் இந்த கம்பிகளால், கூண்டை எந்தத் திசையிலும் இலகுவாக இயக்கலாம். இதனால் கூண்டில் இருப்பவர்கள் அந்தரத்தில் மிதப்பது மற்றும் பறப்பதுபோன்ற அனுபவத்தை பெற முடியும்.

1.4 டன் எடையைத் தாங்கக்கூடியது என்பதால் குடும்பத்தில் உள்ள அனைவருமே பறக்கும் பரவசத்தை அனுபவிக்கலாம். இதன் பிரமாண்ட வடிவம் விரைவில் பொழுதுபோக்கு பூங்காக் களிலும் இடம் பெற்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை.

Comments