உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி

* துருக்கியில் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சி செய்தனர். ராணுவத்தினரின் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்காவில் வசித்து வரும் துருக்கியை சேர்ந்த மதபோதகர் பத்ஹூல்லா குலன் தான் காரணம் என துருக்கி குற்றம் சாட்டி வருவதோடு, அவரை அங்கிருந்து நாடு கடத்தவும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ராணுவ புரட்சி முயற்சியில் தொடர்புடையதாக கூறி பத்ஹூல்லா குலனின் சகோதரர் குட்பெத்தின் குலனை துருக்கி போலீசார் கைது செய்து உள்ளனர்.

* லிபியாவின் சிர்ட்டே நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ராணுவவீரர்கள் 8 பேர் உயிர் இழந்தனர். ஐ.எஸ். இயக்கத்தினர் சுட்டதில் நெதர்லாந்தை சேர்ந்த பத்திரிகை புகைப்பட கலைஞர் ஒருவர் பலியானார்.

* அமெரிக்காவில் வாழ்ந்து வரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் விரைவில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்கு முன் நிலைமையை ஆராய்ந்து, கடவுளை பிரார்த்தித்து தங்களது மனசாட்சியின் படி செயல்பட வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுறுத்தி உள்ளார்.

* ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பிடியில் இருந்த குண்டூஸ் நகரை அரசுப்படை கடந்த ஆண்டு மீட்டது. இந்த நிலையில் மீண்டும் குண்டூஸ் நகரை கைப்பற்றும் நோக்கில் தலீபான்கள் நேற்று அங்கு உச்சக்காட்ட தாக்குதலை நடத்தினர். தலீபான்களின் முயற்சியை முறியடிக்க ராணுவத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

No comments:

Post a Comment