SCROL

Sunday, October 9, 2016

தெரிந்து கொள்வோம் : அடுக்குமாடி வீடு அளவு விகிதங்கள்

தெரிந்து கொள்வோம் : அடுக்குமாடி வீடு அளவு விகிதங்கள்

'கார்பெட் ஏரியா', 'பிளிந்த் ஏரியா', 'பில்ட் அப் ஏரியா', மற்றும் 'சூப்பர் பில்ட் அப் ஏரியா' அளவுகளின் சரியான சதவிகிதத்தை அடுக்குமாடி வீடுகளில் எவ்வாறு தெரிந்துகொள்வது..?

'கார்பெட் ஏரியா'

என்பது வீட்டுக்குள் இருக்கும் சுவர்களுக்கு இடையில் பயன்படுத்தப்படும் பகுதியாகும். 800 சதுர அடிகள் மொத்த அளவாக கொண்ட வீட்டில் 'கார்பெட் ஏரியா' என்பது 60 முதல் 70 சதுர அடிகள் கொண்டதாக இருக்கலாம். இந்திய தேசிய கட்டட நெறிமுறையின்படி 'கார்பெட் ஏரியா' என்பது 'பிளாட்' அல்லது வீட்டில் புழங்கக்கூடிய உள் அளவு ஆகும். அதாவது அறைகளின் மொத்த உள் அளவு என குறிப்பிடலாம்.

'பிளிந்த் ஏரியா'

மேற்கண்ட 'கார்பெட் ஏரியாவுடன்' சுவரின் தடிமனையும் சேர்ந்து கிடைப்பது 'பிளிந்த் ஏரியா' எனப்படும். தமிழில் அது கட்டிடத்தின் தளப்பரப்பு என்று சொல்லப்படும். பொதுவாக, சுவர்களின் தடிமன் 8 அல்லது 9 அங்குலமாகவும், உள்தடுப்பு சுவர்கள் 4 அல்லது 4.5 அங்குலமாகவும் இருக்கும்.

'பில்ட் அப் ஏரியா'

'பில்ட் அப் ஏரியா' என்பதில் 'பிளிந்த் ஏரியாவுடன்', பொது பயன்பாட்டு பகுதிகளான படிக்கட்டுகள், காவலாளி அறை, நுழைவுப்பாதை, 'லிப்ட்', மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டு மற்றும் 'அமெனிடிஸ்' எனப்படும் உடற்பயிற்சி கூடம், தியான அறை, சமுதாய கூடம், விளையாடும் இடங்கள், நூலகம் ஆகியவற்றின் தளப்பரப்புகளின் அளவுகள் கணக்கிடப்படும் முறையாகும். 'கார்பெட் ஏரியா', சுவர்களின் அளவுகள், பொது பயன்பாட்டு பகுதிகளின் விகிதம், ஆகியவற்றின் மொத்த அளவுதான் இது.

'சூப்பர் பில்ட் அப் ஏரியா'

அடுக்குமாடி கட்டடத்தில் செய்யப்படும் வசதிகளுக்கேற்ப இம்முறை கணக்கிடப்படுகிறது. வழக்கமாக, 'பில்ட் அப் ஏரியாவை' விடவும் 'சூப்பர் பில்ட் அப் ஏரியா' குறைந்தபட்சம் 15 சதவிகித அளவு அதிகமாக இருக்கும். அதாவது 800 சதுர அடியில் வீடு என்றால் அதன் 'சூப்பர் பில்ட் அப் ஏரியா' என்பது 920 சதுர அடிகள் அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கலாம். 'பில்ட் அப் ஏரியாவுடன்' சுற்றுச்சுவர், கீழ்நிலை மற்றும் மேல்நிலை தொட்டி, நீச்சல் குளம் போன்றவைகளும் விகிதாச்சாரப்படி சேர்க்கப்பட்டு சூப்பர் 'பில்ட் அப் ஏரியா' என்று சொல்லப்படும்.

No comments:

Post a Comment