KALVISOLAI TNPSC

Wednesday, 5 October 2016

திரை விமர்சனம் எம்.எஸ்.தோனி: சொல்லப்படாத கதை

திரை விமர்சனம் எம்.எஸ்.தோனி: சொல்லப்படாத கதை

இந்திய கிரிக்கெட் அணி கேப் டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தியில் உருவாகியிருக்கும் படத்தின் தமிழ் மொழிமாற்று வடிவம் இது. 2011 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியே படத்தின் தொடக்கமும் முடிவுமாக அமைந் துள்ளது. வழக்கமாக 5-ம் ஆட்டக் காரராக இறங்கும் யுவராஜ் சிங்குக் குப் பதில் தோனி களமிறங்கும் காட்சியோடு படம் தொடங்குகிறது. வெற்றிக்கான சிக்ஸரை அடிப்ப தோடு முடிகிறது. களமிறங்குவதற் கும் அந்த சிக்ஸருக்கும் இடையே தோனியின் கதை சொல்லப் படுகிறது. இந்தியாவுக்குப் பல வெற்றி களைச் சாத்தியப்படுத்திய தோனி, இந்தியா உலகக் கோப்பை வெல் லவும் முக்கியக் காரணமாக அமைந் தவர். அந்த இடத்தை அடைய அவர் எதிர்கொண்ட போராட்டங்களைச் சொல்கிறது படம். இயக்குநர் நீரஜ் பாண்டேயும் திலிப் ஜாவும் இணைந்து எழுதியிருக்கும் திரைக் கதை, தோனியின் கிரிக்கெட் வாழ்வையும் காதலையும் கலந்து கதை சொல்கிறது. மிகையான நாடக பாணி வசனங்களையோ, காட்சி களையோ நம்பாமல் எதார்த்தமான வசனங்கள், நிகழ்வுகள் மூலம் படம் நகர்கிறது.

படத்தின் முதல் பாதி, சிறு வயது முதல் இந்திய அணியில் சேர்வ தற்கு முந்தைய கட்டம் வரை யிலான தோனியின் வாழ்வைச் சித்தரிக்கிறது. இரண்டாம் பாதி, அணியில் இடம்பெறுவது முதல் 2011 உலகக் கோப்பை வெற்றிவரை பயணிக்கிறது. இடையில் காதல் அத்தியாயங்களும் உள்ளன.

தோனி உருவாகும் விதத்தை யும் அவர் அடுத்தடுத்த கட்டங்களை எட்டும் விதத்தையும் உணர்ச்சி கரமாகச் சித்தரிப்பதில் இயக்குந ருக்கு வெற்றிதான். தோனியின் குடும்பம், நண்பர்கள், அவரது கோச், காதல்கள், அவரது பயிற்சி கள், காத்திருப்பின் வலி ஆகியவை நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. யுவ ராஜ் சிங் தோனி முதலில் சந் தித்துக்கொள்ளும் காட்சி அபார மாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தோனி ஹெலிகாப்டர் ஷாட் கற்றுக் கொள்ளும் காட்சியும் நன்றாக உள்ளது.

தோனி அணியில் இடம்பெற்ற தையும் அதற்குப் பின்பு நடந்தவற் றையும் காட்டும் இரண்டாம் பாதி படுத்துக்கொண்டுவிடுகிறது. தோனி அணிக்கு வந்த பிறகு இந்திய அணியின் பயணம் ஒரு நபர் ஆட்டமாக மாறிவிடுகிறது. உண்மைக்குப் புறம்பான இந்தச் சித்தரிப்பு, படத்தின் ஆதாரமான நோக்கத்தையே பாதிக்கிறது. தோனியின் வளர்ச்சியில் சவுரவ் கங்குலிக்கு இருந்த பங்கு, தோனி கேப்டன் ஆனதன் பின்னணி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே போன்ற மூத்த வீரர்களுடனான தோனியின் உறவு ஆகியவை பற்றிப் பேச்சே காணோம். வீரேந்திர சேவாக் தோனி இடையே சிண்டு முடிந்த ஊடகங்களின் போக்கும், தேர்வு விஷயத்தில் தோனி மூத்த வீரர்கள் சிலருக்கு எதிராகப் பேசி யதும் போகிறபோக்கில் காட்டப் படுகின்றன.

தோனியின் தலைமையில் ஒரு நாள், 20 ஓவர் போட்டிகள் மட்டுமே இடம்பெறுகின்றன. டெஸ்ட் போட்டிகள் ஒரு காட்சித் துணுக் காகக்கூட இடம்பெறவில்லை. இதே காலகட்டத்தில்தான் இந்தியா டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற் றது. உலகக் கோப்பை வெற்றிக்கு இணையான இந்தத் தருணம் படத்தில் இல்லை. தோனியின் கிரிக்கெட் வாழ்வின் ஏற்ற இறக் கங்களும் படத்தில் இல்லை. ஐபிஎல் பற்றிப் பேச்சே இல்லை. எல் லாமே ஏறுமுகம்தான். இரண்டாம் பாதியில் வரும் காதல் அத்தியாயங் கள் நன்றாகக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. தோனியின் முன் னேற்றத்தில் அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு இருக்கும் ஈடுபாடு நெகிழவைக்கும் விதத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

நிஜ வாழ்வை அடிப்படையாகக் கொள்ளும் படங்களில் பிரதான பாத்திரத்துக்கான நட்சத்திரத் தேர்வுதான் இயக்குநருக்கான முதல் சவால். நீரஜ் பாண்டே அதில் வென்றிருக்கிறார். தோனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஷாந்த் சிங்கின் தோற்றப் பொருத்தம் நம்பகத்தன்மையை உருவாக்குகிறது. தோனியின் உடல்மொழியையும் மட்டையடி பாணியையும் கிட்டத்தட்டக் கச் சிதமாகக் கொண்டுவந்திருக்கிறார் சுஷாந்த். உணர்ச்சிகளைத் தேவை யான அளவு வெளிப்படுத்தியிருக் கிறார்.

தோனியின் கோச் கதாபாத்திரத் தில் அசத்தியிருக்கிறார் ராஜேஷ் சர்மா. அனுபம் கெர், பூமிகா, திஷா பட்டானி, கியாரா அத்வானி, ஹெர்ரி டங்ரி என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களில் மிளிர் கிறார்கள். குறிப்பாக யுவரா ஜின் அலட்சியத்தையும் ஆவே சத்தையும் அப்படியே பிரதிபலிக் கிறார் ஹெர்ரி டங்ரி.

நிஜப் போட்டிகளின் காட்சிகளை யும், படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சிகளையும் இணைத்த விதம் அபாரம். நாராயண் சிங்கின் எடிட்டிங்கும் கிராஃபிக்ஸும் இணைந்து சாதித்துள்ள அற்புதம் இது. யுவராஜ் 'தோனி'யைக் கட்டிப்பிடிக்கும் காட்சி, சச்சின் 'தோனி'யைப் பாராட்டும் காட்சி ஆகியவை உதாரணங்கள். ஆட்டம், பயிற்சி தொடர்பான காட்சிகள் மிக நன்றாக உருப்பெற்றுள்ளன. சந்தோஷ் துண்டியிலின் ஒளிப்பதி வும் அருமை. சஞ்சய் சவுத்ரியின் பின்னணி இசை சில இடங்களில் இரைச்சலாக இருந்தாலும் பல இடங்களில் படத்தோடு நம்மை ஒன்றவைக்கிறது.

'சொல்லப்படாத கதை' என் கிறது தலைப்பு. அப்படி எதையும் படத்தில் காணோம். தொழில்நுட்பத் தரம், நடிப்பு, அற்புதமான காட்சி அமைப்புகள் ஆகியவை இருந்தும் படத்தின் தாக்கம் வலுவாக இல்லை. 3 மணி நேரத்தைத் தாண்டும் நீளமும், இரண்டாம் பாதியின் தட்டையான சித்தரிப்பும் விறுவிறுப்பான போட்டியின்போது கொட்டும் பெருமழையாக படத்தைப் பாதிக்கின்றன.  

No comments:

Post a comment