உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...

* பிரேசில் நாட்டில் ஜார்டினோபோலிஸ் சிறையில் நேற்று முன்தினம் கைதிகள் திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சிறையின் ஒரு பகுதியை அவர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவத்தின்போது 200 கைதிகள் தப்பினர். அவர்களில் பாதிப்பேர் சில மணி நேரத்தில் மீண்டும் பிடிபட்டனர். இதையடுத்து அந்த சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

* பாகிஸ்தானின் அணுகுண்டுகள், பயங்கரவாதிகளின் கைகளில் கிடைத்து விடும் வாய்ப்பு உள்ளதாகவும், இது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அம்சமாக அமைந்துள்ளதாகவும் அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார்.

* பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுட்டர்டே, அங்கு போதைப்பொருள் உபயோகிக்கிறவர்கள், அவற்றை கடத்தி வருபவர்கள் என 30 லட்சம் பேரை தான், நாஜிக்களின் தலைவரான அடால்ப் ஹிட்லரை போன்று கூண்டோடு அழித்து விட்டால் அது மகிழ்ச்சியைத்தரும் என கூறி உள்ளார்.

* மெக்சிகோவில் அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் இடையே பிரபலமாக உள்ள ஒரு ஏரியின் அருகில் உள்ள லெர்மா ஆற்றில் 12 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த உடல்கள், 2 போதைப்பொருள் கடத்தல் கும்பலிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.

* அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் ஹோபோக்கன் ரெயில் நிலையத்தில் ஒரு பயணிகள் ரெயில் நேற்று அதிவேகமாக ஓடி, அங்குள்ள தடுப்பு வேலி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் ஒருவர் பலி ஆனார். 114 பேர் காயம் அடைந்தனர்.

Comments