அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை மாவட்ட ஆட்சியர் பி.மகேஸ்வரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:- சென்னை மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) காலியாகவுள்ள பணிமனை உதவி யாளர், அலுவலக உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிமனை உதவியாளர் பணிக்கு என்டிசி அல்லது என்ஏசி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 30-க்குள் இருக்க வேண்டும். இதர பிரிவின ருக்கு வயது வரம்பு 35 வரை. அலு வலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம். வயது குறைந்தபட்சம் 30 இருக்க வேண்டும். மேலும் தொழில்நுட்ப பணியிடங்களான கட்டிட வரைவாளர் (எஸ்சி அருந்ததியர் பெண்களுக்கு முன்னுரிமை), கடை சலர் (பொதுப்பிரிவு பெண்களுக்கு முன்னுரிமை), இயந்திர வேலையாள் (எம்பிசி, டிஎன்சி சீர்மரபினர் பெண்களுக்கு முன்னுரிமை, வர்ணம் பூசுபவர் (பிசி, எம்பிசி), கம்பியர்-இயந்திர தளவாடங்கள் பராமரித்தல், (பொது), வெல்டர் (எஸ்சி அருந்ததியர் பெண்களுக்கு முன்னுரிமை) ஆகிய பதவிகளும் நிரப்பப்பட உள்ளன. இப் பணிகளுக்கான விண்ணப்பங் களை வடசென்னை தண்டையார் பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம் (தொலைபேசி எண் 044-25209268) பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நவம்பர் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் மகேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.

Comments